பாஜகவின் மீது எனக்கு கோபம் இருந்ததா எனக் கேட்டால், இருந்தது; இறுமாப்புடன் எப்போதும் சொல்வேன் நான் ஒரு தேசியவாதி.
எனது மதத்தையும், சாதியையும் வீட்டில் வைத்துவிட்டு வருகிறேன்; எல்லா காலத்திலும் மதத்தை தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
சாதி, மதத்தை வைத்து இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்து பட்டதுபோதும்; அந்த சாக்கடை அரசியல் நமக்கு வேண்டாம்.
தமிழகத்தில் 4-இல் ஒரு ஆண் மது அருந்துகின்றனர்; குற்றச்செயல்களின் பின்னணியில் போதை இருக்கிறது. கல்லூரிகளில் போதை விழிப்புணர்வு அம்பாசிடர்கள் அவசியம்.
‘We The Leaders’ அமைப்பு அடுத்த 6 மாத காலம் 6 முக்கிய பிரச்னைகளை எடுத்து பேச இருக்கிறோம்; அடுத்த 6 மாதம் நமக்கான இலக்கு தெள்ளத் தெளிவாக உள்ளது.
நல்லவர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த மேடை உள்ளது.
தவெக அரசில் இருப்பவர்கள் 10, 15, 20 வருடம் எம்.எல்.ஏவாக இருந்தவர்கள் அல்ல. தட்டு தடுமாறி வந்தவர்கள்.
அண்ணன் செங்கோட்டையனை தவிர அனைவரும் முதல்முறை அமைச்சர்கள்; கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள்.
நல்ல சமுதாயமாக இருந்தால் தடுமாறும்போது தூக்கிச் பிடிக்க வேண்டுமே தவிர அழுத்திவிடக் கூடாது.
பெண்கள், கல்லூரி மாணவிகளை பார்க்கும்போது நம் இலக்கில் 50%-ஐ தாண்டிவிட்டோம் என தெரிகிறது.
ஜூன் 5இல் ஆரம்பிக்கப்பட்ட ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு ஒரு அரசியல் இயக்கம்; இன்றுடன் 38ஆவது நாள்.
38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர்; இது என் குடும்ப கட்சி இல்லை.
இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான்; தமிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள்.
நம் வேலையின் மூலமாக மக்கள் நம்மிடம் வர வேண்டும்; யாரையும் கூப்பிட வேண்டாம்.
-வீ த லீடர்ஸ் முதல் மாநாட்டில் அண்ணாமலை பேச்சு.
