📌முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியாக த.வெ.க எம்எல்ஏக்களிடம் பேரம் – 3 பேர் கைது
📌கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
📌தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள த.வெ.கவின் எம்.எல்.ஏக்களை விலை பேசி வாங்க முயற்சி என கடந்த சில நாட்களாக புகார்
📌ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவை அணுகி கட்சி மாற பேரம் பேசியதாக யூட்யூபர் IDPS திருநாவுகரசு ஏற்கனவே கைது
📌IDPS திருநாவுக்கரசு கொடுத்த தகவலின் அடிப்படையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான மேலும் 2 பேர் கைது
📌கரூரில் சக்தி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் திமுக பிரமுகர்கள் கார்த்திக் மற்றும் ரமேஷ் சென்னை போலீசாரால் கைது
📌கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர்கள் 2 பேரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் ஆவர்
📌கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர்கள் 2 பேரின் வீடுகளிலும் போலீசார் ரெய்டு – ரொக்கப்பணம் பறிமுதல்
