கரூரில் நடந்த முப்பெரும் திமுக அரசில் சாராயம் விற்ற பணத்தில் தான் நடத்தப்பட்டு உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: 8 ஆண்டுகளுக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பியை திருடன் என விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது பாராட்டுகிறார். உலக மகா உத்தமர் செந்தில் பாலாஜி என்று முதல்வர் சான்றிதழ் கொடுத்துள்ளார். பாஜ கட்சி தமிழக மக்கள் இதயத்தில் இடம் பெற்று கொண்டு இருக்கிறது. கரூரில் நடந்த முப்பெரும் திமுக அரசில் சாராயம் விற்ற பணத்தில் தான் நடத்தப்பட்டு உள்ளது.
ஊழல்வாதிகள்
சாராய அமைச்சராக 3 ஆண்டுகள் பணி செய்து, அவர் சம்பாதித்த பணத்தில் தான் இன்றைக்கு கரூரில் இத்தனை ஆண்டுகளாக இருக்க கூடிய திமுகவின் முப்பெரும் விழா நடக்கிறது. இதனை விட அய்யோ பாவம் என்று சொல்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் பார்க்க வேண்டும். ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் வைத்து கொண்டு, அதில் சம்பாதித்த பணத்தில் நடத்திய விழா மேடையில் ஏதோ சாதனை செய்தது போல் எங்களுக்கு எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறுகிறார்.
கண்ணாடியை பாருங்க
முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள். கண்ணாடியை பாருங்கள். எப்படிபட்ட ஊழல்வாதிகளை கட்சியில் வைத்து இருக்கிறீர்கள் என்று பாருங்கள். அதன் பிறகு பாஜவுக்கு அறிவுரை கொடுங்கள்.
இன்றைக்கு திமுகவுக்கு எடுபிடியாக தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி தான். அந்த காங்கிரஸ் கட்சியின் பெயரை தமிழக எடுபிடி கட்சி என்று மாற்றிவிடலாம். திமுகவுக்கு எடுபிடி வேலை செய்வதற்கு ஒரு கட்சி.
