தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவர்களின் இரண்டாம் கட்ட பட்டியலில் இடம்பெறுபவர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தேர்வு செய்ய உள்ளனர்.
அந்தப் பட்டியலில் இடம் பெறுபவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை அல்லது நாளை மறுநாள் நேர்காணல் செய்வார்.
முதல் கட்ட பட்டியல் போலவே இரண்டாம் கட்ட பட்டியலிலும் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பங்கேற்பார்கள்.
