தவெக அரசைக் கவிழ்க்கச் சதி செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி திமுகவின் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். நேரில் ஆஜராக சொல்லி போலீசார் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஜூன் 27-க்குப் பின் கட்சி கூட்டங்களில் பங்கேற்காத அவரது செல்போன்கள் அணைக்கப்பட்டுள்ளன. அறிவாலயத்திற்கும் அவர் வராததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
