கோவையில் இருந்து நேற்று இரவு, 10.30மணிக்கு, ஆம்னி பஸ்சில் 24 பயணிகளை ஏற்றுக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர். இரவு 12.45 மணிக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி வைகுந்தம் டோல்கேட் அருகே பஸ் வந்தபோது, பேருந்தில் இருந்த பயணிகள் டீ குடிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது.
அப்போது சொகுசு பஸ்ஸில் பயணம் செய்த கோவையைச் சேர்ந்த சங்கர் (45) என்பவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து டீ குடித்துவிட்டு, மீண்டும் திரும்ப வந்து பஸ்சில் தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது இவரது பேக் மாயமாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர், ‘தான் கொண்டு வந்த பையில் 3 கிலோ தங்க கட்டிகளை வைத்திருந்ததாகவும், அந்த பேக் மாயமாகிவிட்டதாகவும்’ பஸ் ஓட்டுநர்கள் மற்றும் அங்கிருந்த பயணிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சங்ககிரி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சங்கர், கோவையில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான தங்க நகை செய்யும் பட்டறையில் 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதும், நேற்று நகைகள் விற்பனை செய்வது தொடர்பாக கோவையில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் 3கிலோ நகையுடன் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது
