சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை மீண்டும் உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரண மற்றும் நடுத்தர ரக வெளிநாட்டு மதுபானங்கள், பீர் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்துவது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் குடிமகன்கள் கலக்கமடைந்துள்ளனர். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போதைப்பொருள் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியிருந்தார்.
சொன்னது போலவே டாஸ்மாக் விவகாரத்தில் விஜய் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் 717 மது கடைகளை மூட உத்தரவிட்டார்.
விஜய் அரசு
இது பெண்களுடைய பெரும் வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற ஏற்கனவே இருக்கும் விதியை மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மதுவிரும்பிகளை கட்டுப்படுத்தும் வகையில், அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தரும் வகையில், தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை மீண்டும் உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக்
தமிழகத்தில் தற்போது 4,000-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் தினமுன் ரூ.150 கோடி முதல் 200 கோடிக்கும் அதிகமான வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது. இதுவே தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விசேஷ தினங்கள் என்றால் இது 400 முதல் 500 கோடியாகக் கூட இருக்கும். இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சில வகை மதுபானங்களின் சில்லறை விலையை உயர்த்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
