திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (40) என்பவர் தனது மகன்கள் இருவருடன் வீரவநல்லூர் காவல் நிலைய சரகம் வல்லத்து நம்பிகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த நபர்கள் அவரை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
காளிமுத்துவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அவரது மகன் ஜெயராஜ் (5) என்ற சிறுவனையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். காளிமுத்து மற்றும் அவரது மகன் இருவரையும் தலை துண்டித்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காளிமுத்துவின் மற்றொரு மகன் சின்னதுரை (15) என்பவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பட்டப்பகலில் நடந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
