சென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை பகுதியில், அலட்சியமாக நடந்த பாதாளச் சாக்கடை பணிகளால், தந்தையுடன் நடந்து சென்ற 3 வயது சிறுவன் மீது இரும்புத் தகடுகள் விழுந்து உயிரிழப்பு.
எவ்வித பாதுகாப்பும் இன்றி ஜேசிபி மூலம் இரும்பு தகடு தூக்கப்பட, ரோப் அறுபட்டதால் சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் மீது தகடு பலமாக விழுந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
உயிரிழந்த 3 வயது சிறுவனின் தந்தை அளித்த புகாரில் திட்ட மேலாளர் முத்துகுமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன், JCB ஆபரேட்டர் ரமேஷ் ஆகியோர் கைது.
