மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தமிழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் வீடு, தமிழக அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீபா ஜோசப், கார்த்திகேயன் வீடுகளில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த வழக்கில் 2 அதிகாரிகளை TN அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது.
