தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அறிவிக்கும் விலையில்லா மடிக்கணினி, உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக, பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை மார்ச் மாதத்தில் விசாரிப்பதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் உறுதி செய்துள்ளார்.
