நேபாள அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. Balendra Shah தலைமையில் இளைஞர்கள் ஆதரவு பெற்ற புதிய அரசியல் எழுச்சி உருவாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் KP Sharma Oli தலைமையிலான கம்யூனிஸ்ட் அணிகள் இந்த தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளன. ஆரம்ப கணிப்புகளின்படி அவர்கள் சுமார் 30 இடங்கள் மட்டுமே பெறலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் Rastriya Swatantra Party ஏற்கனவே 41 இடங்களில் வெற்றி பெற்று மேலும் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. நேபாள பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 138 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாலன் ஷா பிரதமர் பதவிக்கான முக்கிய வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.
இளைஞர்கள் ஆதரவு, சமூக ஊடகங்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான மனநிலை ஆகியவை நேபாள அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கியதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
