மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.வி.எம்.கலைவாணி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா தாளாளர் டாக்டர் எம்.வி.எம். மருதுபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.பள்ளி சேர்மனும், பாஜக மாநில விவசாய அணி துணை தலைவருமான மணி என்ற முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் தீபாராகிணி வரவேற்புரையாற்றினார்.இதையடுத்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதையடுத்து பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு முன்னால் மாவட்ட நீதிபதியும்,தற்போதைய டி.என்.பி.எஸ்.சி உறுப்பினருமான ஏ.ஆர்.வி.இரவி அவர்கள்,பதக்கங்கள், பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
