அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேட்புமனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்களை மறைக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த வாக்காளர் விக்னேஸ்வரன் என்பவர் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்க செய்திருந்தார். அதில், ‘தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களை தற்போது ஒப்பிடும்போது, சொத்துகள் அதிக அளவில் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை அவர் தாக்கல் செய்யவில்லை’ என குறிப்பிட்டிருந்தார்.
