பழனியில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது
திண்டுக்கல், பழனி பேருந்து நிலையம் அருகே வையாபுரி குளம் ரவுண்டானா பகுதியில் மனைவி பகவதி(28)-யை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் பிரவீன்குமார்.
தகவல் அறிந்த பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி, சார்பு ஆய்வாளர் சந்திரன் மற்றும் காவலர்கள் மனைவி பகவதியை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
கணவன் பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக கத்தியால் குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
