திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய பணியாற்றி வந்த
சார்பு ஆய்வாளர்(SI) ராஜகோபால் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்று, அவருக்கு நள்ளிரவில் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி அத்துமீறல் புகாரில் கடந்த மே மாதம் பணியிடை நீக்கம்(Suspend) திண்டுக்கல் சரக DIG.சசிமோகன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது தென்மண்டல I.G. விஜயேந்திர பிதாரி
சார்பு ஆய்வாளர் ராஜகோபாலை கட்டாய பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இருவரை கட்டாய பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
