இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானமான C295, டிசம்பர் 31-க்குள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த விமானம், தற்போது இறுதிக்கட்ட பறக்கும் சோதனை மற்றும் சான்றிதழ் பெறும் பணிகளில் உள்ளது.
ஒப்படைக்கப்பட்ட பிறகு, ஆக்ரா அல்லது வதோதராவில் உள்ள இந்திய விமானப்படையின் படைப்பிரிவுகளில் இந்த விமானம் சேர்க்கப்படவுள்ளது
