1) பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு – ஏறக்குறைய NDA கூட்டணி கதவை சாத்திவிட்டார்; ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு.
2) அதிமுக-பாஜக கூட்டணியில், அதிமுகவுக்கு பிறகு இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துடன் தொகுதிகள் கிடைத்தால் பச்சைக்கொடி காட்டுவோம் என கறார் காட்டுகிறது தேமுதிக!
நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தகவல்.
3) அமமுக மீண்டும் NDA கூட்டணியில் இணைய வாய்ப்பு. நாளை டிடிவி தினகரன் முடிவை அறிவிப்பார் எனத் தகவல்.
4) கொங்கு தனியரசு, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி, ஐஜேகே பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி ஏசி சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான் பாண்டியன் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக-பாஜக கூட்டணியில் நீடிக்கவே வாய்ப்பு. அறிவிப்புகள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒவ்வொன்றாக வெளிவரும்.
