மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து ஓமன் கடல் மற்றும் வடக்கு இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்டமான கூட்டு கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை நோக்கிப் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ள சூழலில், அதற்குப் பதிலடியாகச் சீனா மற்றும் ரஷ்யாவுடன் கைகோர்த்துள்ள ஈரான், தனது கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த இக்கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
