இன்று முதல் புதிய பாதை, புதிய இலக்கு. 17 ஆண்டுகள் போராடிகிட்டு இருக்கேன். புதிய பாதைக்கான போராட்டம் தான் இது.
தமிழ்நாட்டின் மண்ணை, கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை இதுவரை நான் விட்டுக்கொடுத்ததில்லை.
பெருமைமிகு இந்தியன், பாரம்பரியமிக்க தமிழன் என சொல்வதில் பெருமைப்படுகிறேன்.
பாஜக தனித்து நிற்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. தனித்து நின்றால் தான் நமக்கு சாதகம், பாதகம் என்ன என தெரியவரும்.
சின்ன சின்ன பிரச்சினைகளை எடுத்துச்சென்று மேலிடத்துக்கும் நாம் பிரச்சினையாக இருக்க கூடாது என 18மாதங்களாக நான் தனி இயக்கம் என்ற பாதையில் பயணிக்க தயாராகிவிட்டேன்.
நாம் தொடங்க இருக்கும் கட்சி, வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும். கட்சியில் பலரை தலைவர்களாக உருவாக்க வேண்டும். இதுதான் என் முதல் பணி.
அரசியலில் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நிரந்தர எம்.பி, நிரந்தர எம்.எல்.ஏ என்ற முறை இருக்காது.
நாம் யாருக்கும் போட்டி கிடையாது.
கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் நிதானம். வருகிறவர்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இயக்கத்தை வலுப்படுத்தி, அரசியல்லசியாக மாற்றுவோம்..
வீ த லீடர் என்ற இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
ஜனநாயக காவலன்…
