திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, ரூபா கீதாராணி உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வுக்குழு ஆய்வாளர் தலைமையிலான குழுவினருடன் இணைந்து
ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தயம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டபோது கீரனூர் சார்பதிவாளரான ஆயக்குடி சேர்ந்த மூர்த்தி(40)
இவர் தற்போது கள்ளிமந்தியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் (பொறுப்பு) சார்பதிவாளராக பணிபுரிகிறார் இவர் கள்ளிமந்தயம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தபோது உணவுப்பையில் கணக்கில் வராத ரூ.4,33,000 மற்றும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.7 ஆயிரம் என மொத்தம் ரூ.4,41,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
