திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் உள்ள சாத்தம்பாடி விஏஓ அலுவலகம் தனி நபர் பிடியில் சிக்கி தவிக்கிறது. புரோக்கர்களாக வேலை செய்து வருகின்றனர். சாத்தம்பாடி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி கணவர் முருகன் என்பவர் புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். இவர் சாத்தம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் என்பவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அந்த கிராமத்தில் உள்ள மக்களிடம் லட்ச கணக்கில் பணம் லஞ்சமாக பெற்றுக்கொண்டு பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். மேற்படி நபர் மீதும் அதற்கு துணை போகும் கிராம நிர்வாக அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
