முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் IAS, IPS அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். முன்னாள் ஆட்சியில் இருந்த அதிகாரிகள் பின்வரிசைக்கு மாற்றப்பட்டு, நேர்மையான அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படுகின்றனர்.
அதன்படி, தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபை சேர்ந்த இவர், 2004ஆம் ஆண்டு IPS ஆகி தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிறார். திருநெல்வேலி எஸ்.பி.யாக இருந்தபோது கந்துவட்டி ஒழிப்பில் கடும் நடவடிக்கை எடுத்து கவனம் பெற்றார்.
மேலும், 2011 தேர்தலின்போது மதுரையில் கடுமையான கண்காணிப்பு மூலம் மு.க.அழகிரி ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியவர் என்ற பெயரும் பெற்றார். இதனால் அவர் துணிச்சலான, நேர்மையான அதிகாரியாக அறியப்படுகிறார்.
