🔻 விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தால் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ததாக தகவல்.
🔻 மாவட்ட செயலாளர்களின் ஆதரவை கைப்பற்றுவதில் எடப்பாடி தரப்பு – சண்முகம் தரப்பு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
🔻 தங்களை கட்சியில் இருந்து நீக்கினால், அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற சி.வி. சண்முகம் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்.
🔻 நேற்று முதலே 18 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளதாக பரபரப்பு தகவல்.
🔻 இரண்டு தரப்பினரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட முயற்சிப்பதாக தகவல் வெளியானதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
🔻 விஜய் ஆதரவை பெற முயன்ற விவகாரம் அதிமுகவில் பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
