பாஜக மூத்த தலைவர் H.ராஜா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் அவரின் உடல்நலம் குறித்து அப்போலோ ஹாஸ்பிடல் தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
