எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் நேற்று அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து நடந்த ஆலோசனையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திற்குப் பின்னரும் பேச்சுவார்த்தை நீடித்தாலும் உடன்பாடு எட்டப்படாததால், இதுகுறித்து மேலதிக ஆலோசனைக்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லும் நிலையில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
