எடப்பாடி தொகுதியில் அஇபுதமமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வி.கே. சசிகலா, எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வராக்கியது தான் தனது மிகப்பெரிய தவறு என்றும், நம்பியவர்களே தன்னை முதுகில் குத்திவிட்டார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், தன்னை கட்சியில் இருந்து நீக்கி, சிறையிலேயே அழிக்க முயன்றதாகவும், எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் திமுக இடையே உடன்பாடு இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். விஜய் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதையும் அவர் கண்டித்தார்.
