இந்தத் தாக்குதல்கள் ராணுவ இலக்குகளைத் தவிர்த்து, வேண்டுமென்றே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் (IDF) குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, ஏவுகணைகளில் ‘கிளஸ்டர்’ (Cluster munitions) எனப்படும் தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் “மனிதாபிமானமற்றது” என்று இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகம் சாடியுள்ளது.
