நிலுவை வருமான வரி 2026 ஜனவரி 31 வரை ரூ.9.17 கோடி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வழக்கை எதிர்த்து, ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபா மற்றும் தீபக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
