தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.15) முதல் அக்.20 வரை மதுரையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
🚧கேபிஎஸ் ஹோட்டல் சந்திப்பிலிருந்து நேதாஜி ரோடு, ஜம்ஜம் சந்திப்பிலிருந்து மேலவடம் போக்கி தெரு முழுவதும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
🚦மேல வடம் போக்கி தெருவில் எந்த ஒரு வாகனமும் தீபாவளி வரை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
🛵பெருமாள் தெப்பம் சந்திப்பிலிருந்து வாகனங்கள் நேதாஜி ரோடு செல்ல அனுமதி இல்லை. டவுன்ஹால் ரோடு வழியாக செல்லலாம். நேதாஜி ரோட்டிலிருந்து பச்சை நாச்சியம்மன் கோயில் தெரு வழியாக பெருமாள் தெப்பத்திற்கு செல்லலாம்.
🚘மேலமாசி வீதியிலிருந்து ஆரிய பவன் சந்திப்பு வழியாக ஜான்சி ராணி பூங்கா செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் முருகன் கோயில் வழியாக ஜான்சி ராணி பூங்கா செல்லலாம்.
🚥மேல கோபுரத் தெரு, மேல ஆவணி மூல வீதியிலிருந்து வரும் வாகனங்கள் நேதாஜி ரோடு முருகன் கோயில் செல்லாமல் நேராக மீனாட்சி பேருந்து நிலையம்,கான்சா மேட்டு தெரு,டிஎம் கோர்ட் மேலமாசி வீதி வழியாக முருகன் கோயில் சந்திப்பு செல்லலாம்.
🚦ஜான்சி ராணி பார்க் முதல் முருகன் கோயில் வரை தற்காலிகமாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
🚦கூடலழகர் பெருமாள் கோயில் சந்திப்பிலிருந்து வாகனங்கள் மேல வடம்போக்கி தெரு வழியா டிபிகே ரோடு செல்ல அனுமதி இல்லை. டிஎம் கோர்ட் சந்திப்பிலிருந்து ஆரியபவன் சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி நேதாஜி ரோடு வழியாக டிபிகே ரோடு செல்லலாம்.
🚧டிஎம் கோர்ட் சந்திப்பிலிருந்து வாகனங்கள் மேலவடம் போக்கி தெரு வழியா டிபிகே ரோடு செல்ல அனுமதி இல்லை. டிஎம் கோர்ட் |சந்திப்பிலிருந்து மேலமாசி வீதி ஆரியபவன் சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி நேதாஜி ரோடு வழியாக டிபிகே ரோடு செல்லலாம்.
🚧கேபிஎஸ் சந்திப்பிலிருந்து மேலமாசி வீதி,ஆரிய பவன் சந்திப்பு வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. டிபிகே ரோடு ஜம்ஜம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மேலவடம் போக்கி தெரு வழியா டிஎம் கோர்ட் சந்திப்பு சென்று மேலமாசி வீதி செல்லலாம்.
🚧கேபிஎஸ் ஹோட்டல் சந்திப்பிலிருந்து நேதாஜி ரோடு, ஜம்ஜம் சந்திப்பிலிருந்து மேலவடம் போக்கி தெரு முழுவதும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
