தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ராக்கெட் ராஜா மற்றும் ஹரி நாடாரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ராக்கெட் ராஜாவை முன்மொழிந்த நபர் வாக்காளர் பட்டியல் விவரங்களை தவறாக அளித்ததாகவும், சிறையில் உள்ள ஹரி நாடார் முகவர் மூலம் தாக்கல் செய்த மனு செல்லாதது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
