செங்கோட்டையன் சசிகலா ஆதவ் அர்ஜூனா ரகசிய மூவ்!!
விடிய விடிய நடந்த உளவுத்துறை ஆலோசனை!
ஆட்சியில் பங்கு என்று விஜய் போட்ட குண்டு இப்போதான் வெடிக்க தொடங்கியிருக்கு” என்று நம்பிக்கையுடன் பேசிய விஜய்க்கு, தற்போதைய நிலவரம் சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தேமுதிக, அமமுக போன்ற கட்சிகள் தனது பக்கம் வரும் என்று அவர் எதிர்பார்த்திருந்த சூழலில், முக்கிய கட்சிகள் அனைத்தும் ஏற்கனவே இருக்கும் கூட்டணிகளிலேயே நீடிக்கின்றன. எதிர்பாராத விதமாக தேமுதிக திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது.
கடைசி நேர எதிர்பார்ப்பாக இருந்த காங்கிரஸும் திமுக பக்கம் சாய்ந்துவிட்டதால், விஜய் தற்போது தனது அரசியல் பயணத்தை யாரைத் துணையாகக் கொண்டு தொடரப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த கூட்டணி மாற்றங்கள் விஜய்யை ஒரு வேறு ஒரு “மோடு”க்கு தள்ளியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அவர் பிஜேபியிடம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அதை பவன்கல்யாணே மறுத்துள்ளார்.
ஆனால் நமக்கு கிடைத்த உண்மை தகவல் படி விஜய் 117 சீட்களை பிஜேயிடம் கேட்பதாகவும் 60 -70 சீட்டுக்கள் தரப்படுவதாகவும் தேர்தல் செலவுக்காக பெரிய அளவில் தொகை வழங்குவதாகவும் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் “என்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தால் மட்டுமே கூட்டணிக்கு வருவேன்!” என்ற நிலையில் விஜய் உள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 10-ந்தேதி (நாளை)முதல் விஜய் நேர்காணலை தொடங்கவிருப்பதால்
வரும் மார்ச் 15 க்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் விஜய், சசிகலா மற்றும் டாக்டர் ராமதாஸ்வுடனான கூட்டணியைபற்றி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுபான்மையினரின் ஓட்டுக்களும் சசிகலாவின் முக்குலத்தோர் வாக்குவங்கியும், ராமதாஸின் வன்னியர் ஓட்டுக்களும், டாக்டர் கிருஷ்ணசாமியின் தலித் ஓட்டுக்களும் வெற்றிக்கூட்டணியாக அமையும் என்பதால் விஜய் அதற்கு சம்மதித்து விட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
ஒரு வேளை …….டெல்லியின் மிரட்டலுக்கு விஜய்பணிய நேரிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது குறித்து மாநில உளவுத்துறை நேற்று முன்தினம் விடியற்காலை 3 மணி வரை தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் உள்ளன.
