📌குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது – கரூர் எம்பி ஜோதிமணி
📌இந்தியாவில் ஜனநாயகத்தை ,காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம் – கரூர் எம்பி ஜோதிமணி
📌”தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை எடுக்க முடியாது”
📌அதிமுக சார்பில் எம்எல்ஏக்களாக தேர்வான மூன்று பேர் நேற்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்
📌அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததை எம்பி இன்பதுரை உள்ளிட்டோர் குதிரை பேரம் என விமர்சித்திருந்தனர்
📌தவெகவின் நடவடிக்கையை அதிமுக குதிரைபேரம் என விமர்சித்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரசிலும் எதிர்ப்பு குரல்
📌தவெக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள விசிகவின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜியும் குதிரை பேரம் கூடாது என நேற்று கூறியிருந்தார்
