நாமக்கல் தினசரி சந்தையில் எம்.எல்.ஏ திலீப் ஆய்வு செய்தபோது அவருடன் சென்ற தவெக மாவட்டச் செயலாளர் சதீஸ், அங்கிருந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரசாத்தை ஒருமையில் பேசி, “உன்னை டிரான்ஸ்பர் செய்துவிடுவேன்” என மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அரசு அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களும் அரசு அதிகாரிகளை மிரட்டுவதையும் முதல்வர் விஜய் கண்டுகொள்ளாமல் உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
