நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம், இன்று பிற்பகல் 3.20க்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். சந்திரனின் முழுமையாக சிவப்பு நிறம் மாலை 4.34 மணி முதல் மாலை 5.33 மணி வரை தோன்றும்.
இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வட கிழக்கு பகுதிகளில் கிரகணத்தின் காட்சி முழுமையாக தெரியும். சென்னை, குமரி, டெல்லி, ஹைதரபாத்தில் சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.
