மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாலமுருகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த சின்னம்மா, “திமுகவை வீட்டுக்கு அனுப்பவே இந்த தேர்தலில் களம் காண்கிறோம்” என்றார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ரூ.12 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
