இலங்கையில் உள்ள நீர்கொழும்பு சிறையில் கைதிகள் இடையே வெடித்த கலவரத்தில் 5 காவலர்கள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்பு சிறையில், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கூறப்படும் விவகாரத்தில் கைதிகள் இரு குழுவினருக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. மோதல் காரணமாக சிறைக்குள் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இதை தொடர்ந்து இன்று மீண்டும் தீவிரமடைந்த மோதலில், 5 காவலர்கள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமந்துள்ளனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து பிரத்யேக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
