திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது சாலை மேம்பாட்டுப் பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், கடந்த சோதனையைத் தொடர்ந்து இன்று விசாரணைக்கு ஆஜராக எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி, திங்கட்கிழமை அல்லது வேறு ஒரு நாளில் ஆஜராகக் கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளார்.
