காஸா நகருக்குள் இஸ்ரேலிய படைகள் நுழைந்ததை அடுத்து, அங்கிருந்து பாலத்தீனர்கள் வெளியேறி வருகின்றனர். காஸா நகரின் வடக்குப் பகுதியில் தனது டாங்கிகள், ராணுவ வாகனங்களை இஸ்ரேல் கொண்டுள்ள நிலையில், தெற்கு நோக்கி மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் காஸா நகரில் 150 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறுகிறது. ஹமாஸ் பணய கைதிகளாக வைத்திருப்பவர்களை மீட்கவே இந்த தரைவழி தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
காஸாவில் ஆறு லட்சத்துக்கும் அதிகாமானோர் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. இஸ்ரேலின் நடவடிக்கையை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரத்தில் கால்நடையாக, தங்கள் குழந்தைகள், உடைமைகளை எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.
