நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆனிப் பெருந்திருவிழாவின் 520- வது திரு தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் அருள்மிகு காந்திமதி அம்மன் திருக்கோயில். இங்கு மாதம்தோறும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா கடந்த 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் திருநாளான இன்று திருதேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதனை ஒட்டி கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தேரில் அவர் எழுந்தருளார். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து விழாவை தொடங்கி வைத்தனர்.
