திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பையா இவர் திண்டுக்கல் AMC-ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ரவுண்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த அஜித்சுரேந்தர்(23), பொன்னிமாந்துறை, புதுப்பட்டியை சேர்ந்த ஜெயகிருஷ்ண கண்ணன்(22), மேற்கு மரியனாதபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (எ) குருவி சரவணன்(40) ஆகிய 3 பேரும் கழுத்தில் பட்டாகத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து சட்டை பையில் வைத்திருந்த ரூ.3,200 பணத்தை பறித்ததாக அளித்த புகாரின் பேரில்
நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாகத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
