திண்டுக்கல், நேருஜிநகர் பகுதியில் செல்வபாரதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நந்தவனப்பட்டி சேர்ந்த ரகுராமன்(37) என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான்சிக்கந்தர் துணை தாசில்தார் பிரேம்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான்சிக்கந்தர் துணை தாசில்தார் பிரேம்குமார் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
