தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, இன்று (21.4.2026) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் மௌன காலம் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, பொதுக்கூட்டம், ஊர்வலம், தேர்தல் பிரசாரம், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் தேர்தல் தொடர்பான தகவல் வெளியிடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இசை, திரைப்படம் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை கவரவும் அனுமதி இல்லை.
விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். தொகுதிக்கு வெளியே இருந்து வந்த அரசியல் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும்.
