தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியான AGNI News Services கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணி 234 தொகுதிகளில் 178 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 56 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் திமுக கூட்டணி முழுமையான ஆதிக்கம் செலுத்தும் என சர்வே கூறுகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
அதிமுக கூட்டணி சேலம், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே சவாலான போட்டியை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 7 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருப்பதாக சர்வே தெரிவிக்கிறது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என கணிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
