திண்டுக்கல் மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் அங்குவிலாஸ் இறக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்த முத்துமாமுண்டி(51) தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார்.
தொடர்ந்து முத்துமாமுண்டி வீட்டில் சோதனையிட்டு ரூ.1,34,000 பணம், பரிசு கூப்பன்கள், டோக்கன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
