புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைதான கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பு.
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட கருணாஸுக்கு மே 5-ல் தண்டனை விவரம் அறிவிக்கிறது புதுச்சேரி நீதிமன்றம்.
சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான முதியவர் விவேகானந்தன் சிறையில் ஏற்கெனவே தூக்கிட்டு தற்கொலை.
2024 மார்ச்சில் முத்தியால்பேட்டை பகுதியில் 5ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.
காணாமல்போன சிறுமி இரு நாட்கள் கழித்து வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார்.
500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
