திண்டுக்கல் புனித வளனார் மருத்துவமனை (காட்டாஸ்பத்திரி) திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.4,96,91,130 நிலுவையில் உள்ளது.நிலுவைத் தொகையை செலுத்த கோரி பலமுறைகள் அறிவிப்புகள் அனுப்பியும், நேரில் அறிவித்தும் வரி நிலுவை தொகைகள் செலுத்தாததால்மருத்துவமனை நுழைவாயில் சுற்று சுவற்றில் பொதுவெளியில் வரி பாக்கி தொடர்பாக அறிவிப்பு ப்ளக்ஸ்-ஐ மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டினார்கள்.3 நாட்களுக்குள் வரிபாக்கியை செலுத்தவில்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
