இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள எம்.ஆர்.எப்., கிராப் என்ற பெயரில் பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் சேமித்து வைத்திருந்த ரசாயன பேரலை உற்பத்திக்கு பயன்படுத்த திறந்த போது திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது, வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் தாகூர் (28) என்பவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
தீ விபத்துக்குள்ளான சில மணி நேரத்தில், தொழிலாளர்கள், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்.
