பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் பலர் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என அதிமுகவில் மற்றொரு தரப்பினரும் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்தனர்.
இந்த சூழலில், அதிமுகவின் பல எம்.எல்.ஏக்களை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
