அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததாக கூறி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகளை பறித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. வெற்றி வந்தால் தன்னால் தான், தோல்வி வந்தால் நிர்வாகிகள் மீது பழி போடுகிறார். தற்போது அதிமுக, எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது” என கடுமையாக விமர்சித்தார்.
